மாண்டஸ் புயலால் சீறும் கடல்... படகுகளை பாதுகாக்கும் பணியில் களமிறங்கிய மீனவர்கள்...

மாண்டஸ் புயல் காரணமாக வேதாரண்யத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் கடும் குளிர் காற்று வீசுவதால் சாலைகள் வெறிச்சோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

மாண்டஸ் புயலால் சீறும் கடல்... படகுகளை பாதுகாக்கும் பணியில் களமிறங்கிய மீனவர்கள்...

நாகை | வங்க கடலில் நிலை கொண்டுள்ள தீவிர மாண்டஸ் புயல் காரணமாக வேதாரணத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் அலைகள் 5 அடி உயரம் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது.

கடல் சீற்றம் காரணமாக ஆற்காடுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவாக பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு...

வேதாரண்யம் பகுதியில் இரவில் இருந்து கடும் குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி உள்ளனர் இதனால் சாலைகள் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம்யின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் பேருந்து நிலையம் மக்கள் கூட்டம்யின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க தயார் நிலையில் காவல் துறை சார்பில் மீட்பு படையினர் வேதாரண்யத்தில் முகாமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | ’ மாண்டஸ்’ புயலின் எதிரொலி...! தயார் நிலையில் மின்வாரிய ஊழியர்கள்...!