சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு...

புளியந்தோப்பில் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் விழுந்த மரம் நான்கு மணி நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு...

மாண்டஸ் புயலின் காரணமாக நேற்று மாலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் காற்று பலமாக வீசி வருவதால் பல்வேறு இடங்களில் சிறுசிறு மரங்கள் விழுந்துள்ளன.

அந்த வகையில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள பின்னி மில் உட்புறத்தில் இருந்த மரம்  அதிகாலை 3 மணி அளவில் வேரோடு சாய்ந்து அது அம்பேத்கர் கல்லூரி சாலையில் விழுந்தது இதன் நடுவே தடுப்பு சுவர் ஒன்று இருந்தது மரம் விழுந்ததில் அந்த சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

மேலும் படிக்க | தனி மனிதனாகிய நான் ஒரு லட்சத்து 6 ஆயிரம் மரங்கள் நட்டுள்ளேன்- அமைச்சர் மா.சு பெருமிதம்

இதன் காரணமாக அம்பேத்கர் கல்லூரி சாலையில் போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாலை வேலை என்பதால் போக்குவரத்து பெரியதாக இல்லாத காரணத்தினால் இதுகுறித்து உடனடியாக புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திரு வி க நகர் மண்டல அதிகாரி க்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மரம் அறுக்கும் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மரத்தினை அறுக்க தொடங்கினர். சுமார் 4 மணி நேரத்திற்குள் மரம் முழுவதுமாக அறுக்கப்பட்டு சாலையில் போக்குவரத்து செல்லக்கூடிய சகஜ நிலை ஏற்பட்டது.

அதிகாலை வேலை என்பதால் மரம் விழும் நேரத்தில் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஏதும் இல்லாத காரணத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயல்...! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை...!