ஓசூர் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ஓசூர் பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் தொடர் மண் திருட்டு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறைக்கும் பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் பாகலூர் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர் அப்போது பாகலூர் அருகே முதலாளி - தட்டணப்பள்ளி சாலையில் 2 டிப்பர் லாரிகளில் மண் திருடப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அரசு அனுமதி இன்றி மண் திருடப்பட்டது தெரிய வந்தது இச்சம்பத்தில் தொடர்புடைய நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் ஸ்ரீநாத், சசிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் லாரி உரிமையாளரான எல்லம்மா கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவரையும் கைது செய்தனர், மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர், மேலும் மற்றொரு லாரி உரிமையாளரான சீனிவாசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க   | ரூ.1 லட்சம் மதிப்பிலான கள்ள சாராய பொட்டலங்கள் பறிமுதல்.!