தன்பால் ஈர்ப்பு திருமண அங்கீகாரம் : தலைமைநீதிபதி திட்டவட்டம்

தன்பால் ஈர்ப்பு  திருமண அங்கீகாரம் :  தலைமைநீதிபதி திட்டவட்டம்

தன்பாலின திருமணத்துக்கு ஆதரவான தனது கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் நடத்திய இந்திய-அமெரிக்க உச்சநீதிமன்ற முன்படிகள் ஆலோசனையில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது மனசாட்சியின் தீர்ப்பே அரசியலமைப்பின் தீர்ப்பு எனவும், தன்பாலின உரிமைகளுக்கான தனது ஆதரவு தொடரும் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக தன்பால் ஈர்ப்பு  திருமண அங்கீகார வழக்கில் 5 பேர் அடங்கிய  நீதிபதி அமர்வு விவாதித்து 3 நீதிபதிகள் தன்பால் ஈர்ப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்தும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 2  நீதிபதிகள் ஆதரவு தெரிவித்தும், அதனடிப்படையில்,  தன்பாலின  ஈர்ப்பு திருமணங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார்.  

அப்போது, மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய அவர், அத்திருமணங்கள் நகர்புறக் கருத்தாக்கம் இல்லை - மனிதர்கள் காதல் வயப்படுவது இயற்கையான நிகழ்வு எனக்கூறி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும்  படிக்க   |  நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை..!