மல்யுத்த வீரர்கள் விவகாரம்: பிரிஜ் பூஷன் சிங் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் .!

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யூத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜரானார்.  

பாலியல் புகாருக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மல்யூத்த வீராங்கனைகளின் புகார் மீது விசாரணை நடைபெற்று வரும்நிலையில், டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் சிங் இன்று பிற்பகல் நேரில் ஆஜரானார். 

இதையும் படிக்க   |  விவசாயியை எட்டி உதைத்த விவகாரம்: விஏஓ மற்றும் தலையாரிக்கு வட்டாட்சியர் நோட்டீஸ்!