விநாடிக்கு 1350 கன அடி நீர் திறப்பு; மக்களுக்கு எச்சரிக்கை..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வாலாஜா பாலாறு தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அணையிலிருந்து விநாடிக்கு 1350 கன அடி தண்ணீர்  வெளியேற்றப்பட்டுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள்  பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார். 

வாலாஜாபேட்டை அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு தடுப்பணைக்கு பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 280 கனஅடியும், மகேந்திரவாடி ஏரிக்கு 270 கன அடியும், சக்கரமல்லூர் ஏரிக்கு 110 கன அடியும், தூசி ஏரிக்கு 692 கன அடியும், உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்தமாக வாலாஜாப்பேட்டை தடுப்பணையிலிருந்து விநாடிக்கு 1350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பாசன ஏரிகளுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க   | ”அமைச்சர் பொன்முடி எங்களை அவமதிக்கவில்லை” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி