2024 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட் "Chariot Awards"

2024 ஆம் ஆண்டிற்கான  ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட் "Chariot Awards"

2024 ஆம் ஆண்டிற்கான  ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட் "Chariot Awards" விழாவில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் பங்கேற்று விருதுகள் வழங்கினார்

ஒவ்வோராண்டும் ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட்,  வாழ்நாள் தொழிற்துறை சாதனையாளர்,  கௌரவம், கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில்  "Chariot Awards" வழங்கி சிறப்பித்தது வருகிறது. 

சென்னை எழும்பூரில் உள்ள ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விருது விழாவில், இந்த ஆண்டிற்கான 5 விருதுகள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் முன்னிலையில்  வழங்கப்பட்டன.

அந்த வகையில் மெட்ராஸ் டிஸ்லெக்சியா சங்கத்தின் தலைவர் டி.சந்திரசேகருக்கு கௌரவத்திற்கான  Chariot Award வழங்கப்பட்டது.  

வொகேஷனல் எக்ஸலன்ஸ் விருது விஜய் கார்மென்ட்ஸின் நிர்வாக இயக்குநர், ரொட்டேரியன் டி.விஜயகோபால் ரெட்டிக்கும்,   வாழ்நாள் தொழிற்துறை சாதனையாளர் விருது சங்கர நேத்ராலயா போர்டு ஆஃப் கவர்னர் மருத்துவர். லிங்கம் கோபாலுக்கும் வழங்கப்பட்டது. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏஸ் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற 
 அவிக்ஷித் விஜய் விஸ்வநாத்திற்கு விளையாட்டிற்கான  விருதும்,  கர்நாடக பாடகி,  ஸ்ரீவித்யா வாசுதேவனுக்கு கலைக்கான  "Chariot Awards" வழங்கப்பட்டன. 

விருது பெற்ற ஒவ்வொருவரும்  தங்கள் எண்ணங்களையும், வாழ்நாள் பயணத்தையும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்

இந்த  "Chariot Awards" நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக ரொட்டேரியன் சுரேஷ் ஜெயின், கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ரொட்டேரியன்கள் மஞ்சு குல்கர்னி, மகேஸ்வரன், ஹரிஷ் மகாதேவன், குல்தீப் சேத்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருது பெற்றபின் பேட்டியளித்த ஏஸ் ஸ்கேட்டிங் வீரர், அவிக்ஷித் விஜய், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற போது சீனாவில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்றார். தற்போது தமிழ்நாட்டில் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும் அதனை இன்னும் மேம்படுத்தி தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்த அவர், இந்த சின்ன வயதில் ரோட்டரி மெட்ராஸ் சௌத் வெஸ்ட் சேரியட் விருது பெற்றதற்கு தான் கடன்பட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்