’ மாண்டஸ்’ புயலின் எதிரொலி...! தயார் நிலையில் மின்வாரிய ஊழியர்கள்...!

’ மாண்டஸ்’ புயலின் எதிரொலி...! தயார் நிலையில் மின்வாரிய ஊழியர்கள்...!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயல்’,  நேற்று 
மாலை தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று  காலை 08.30 மணி அளவில் புயலாக வலு குறைந்து காரைக்காலுக்கு 180 கி.மீ. கிழக்கு வட கிழக்கே மற்றும் சென்னைக்கு 260 கி.மீ. தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்திற்கு அருகே இன்று நள்ளிரவு - நாளை (10.12.2022) அதிகாலை கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயல் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி, 25 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என்றும் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றரை லட்சம் போஸ்ட் கம்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தேவையான உபகரணங்கள் அனைத்தும் இருப்பில் உள்ளதாகவும்  மின்வாரிய அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர். இரவு நேரத்தில் புயல் பாதிக்கக்கூடிய மாவட்டங்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதையும் படிக்க : 3- வது குழந்தை பேறுக்காக விடுப்பு கோரிய அரசுப்பள்ளி ஆசிரியர்...! சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!