ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு...!

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக, சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை தீவுத் திடலில், வருகின்ற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சாலைகளை பந்தய களமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இதையும் படிக்க : ”அனைவரும் ஒரு திருமணத்தையாவது உத்தரகண்ட் மாநிலத்தில் நடத்த வேண்டும்” - பிரதமர் மோடி

இந்நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக, கார் பந்தயம் வரும் 15, 16 தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

ஆனால், புயல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி, எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.