சந்திர கிரகணம் எங்கு, எப்போது, எப்படி?

இன்றும் நாளையும் பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது
 
இன்று நள்ளிரவு 11.31 மணிக்கு தொடங்கும் இந்த பகுதி சந்திர கிரகணம் நாளை அதிகாலை 3.36 மணி வரை நிகழவுள்ளது.  இந்த பகுதி சந்திர கிரகத்தில் மிகச்சிறிய அளவு மட்டுமே மறையும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, வடகிழக்கு தெற்கு அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக், அன்டார்ட்டிக்கா பகுதிகளில் தென்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சந்திர கிரகணம் நிகழவுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7.05 மணிக்கு கோயில் மூடப்படும் என்றும் நாளை அதிகாலை 3.15 மணிக்கு  நடை திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதேபோல், பழனி முருகன் கோயிலில் இரவு 8 மணிக்கு அர்த்த ஜாம பூஜைகள் நடைபெற்ற பின்னர் கோயில் அடைக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரகணம் நிறைவு பெற்ற  அதிகாலை கோயில் திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.