பூத்தேரில் பவனி வந்த கோட்டை மாரியம்மன் ...

மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூத்தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பூத்தேரில் பவனி வந்த கோட்டை மாரியம்மன் ...

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசி திருவிழா நேற்று பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படியுடன் தொடங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை திருக்கோயிலின் உட்பிரகாரம் முழுவதும் வண்ண வண்ண கோலவிட்டு சாமி உருவங்கள் பக்தர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  கோட்டை மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் நிகழ்ந்த சிறப்பு வழிபாடுகள்...!

மேலும் பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படி குழுவினரின் சார்பாக கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு துர்க்கை அம்மன் வீற்றிருக்க வலது புறம் சரஸ்வதியும் இடதுபுறம் மகாலட்சுமியும் இன்று மாசி திருவிழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியாக சிறப்பு அலங்காரங்களுடன் காட்சி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூத்தேர் ஊர்வலம் கோவில் பிரகாரத்தில் இருந்து கிளம்பியது. வண்ண வண்ண பூக்களினால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட பூத்தேர், நான்கு ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | குடியரசு தலைவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு...

பூத்தேரில் வீற்றிருக்கும் கோட்டை மாரியம்மனை ரத வீதிகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி செவ்வாய் கிழமை கொடியேற்றமும், வரும் மார்ச் மூன்றாம் தேதி பூக்குழி இறங்குதல் மற்றும் 4ம் தேதி தசாவதார விழாவும் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க | வெகு விமரிசையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்...