வெகு விமரிசையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்...

மன்னார்குடி அருகே திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வெகு விமரிசையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்...
Published on
Updated on
1 min read

திருவாரூர் | மன்னார்குடி அருகே பெருவாழ்ந்தான் கிராமத்தில் அமைந்துள்ளதிரௌபதி அம்மன் ஆலய  நூதன முறையில் புதுப்பிக்கப்பட்டு, வர்ணங்கள் தீட்டி திருப்பணி வேலைகள் நிறைவுற்று,  இன்று கும்பாபிஷேகம் வெகுவிமாசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  நான்கு கால யாகசாலை பூஜை சிவாச்சாரியார்களால் , மஹா கணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், நவக்ரஹ ஹோமம், உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு நிறைவாக மஹா பூர்ணாஹுதி தீபாரதனையை அடுத்து, கலச புறப்பாடு நடைபெற்றது.

புனித தீர்த்தங்கள் கொண்ட கடங்களை   எடுத்து வேத மந்திரங்கள் முழங்க கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் திரௌபதி அம்மன் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தினை நடத்தி வைத்தனர்.

அதனை தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com