திருக்குவளை கோவிலில் கும்பாபிஷேகம்...

திருக்குவளை தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக  நடைபெற்றது.
திருக்குவளை கோவிலில் கும்பாபிஷேகம்...
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம் | திருக்குவளையில் உள்ள தர்மபுர  ஆதீனத்திற்கு சொந்தமான தியாகராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மூவரால் பாடல் பெற்ற ஸ்தலம், நவ கிரகங்களின் தோஷம் நீக்கும் ஸ்தலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இவ்வாலய கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து இன்று இரவு திருக்கல்யாண உற்சவமும் பின்னர் சிறப்பு திருவீதி உலா காட்சி நடைபெற்றது.இதனை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாள், வள்ளி தெய்வானை உடன் முருகப்பெருமான் மற்றும் விநாயகர்,சண்டிஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

தொடர்ந்து திருக்குவளை சகோதரிஞகள் முனைவர் ‌மு.சுந்தரி,மு.சாவித்திரி ஆகியோரின் மல்லாரி மற்றும் சிவன் கீர்த்தனையோடு  வீதியுலா காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

தவதருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று‌ மற்ற னமுறுதி சாமி தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com