தைப்பூசத் தினத்தில் தெப்பத் திருவிழா.... 

தைப்பூசத் தினத்தில் தெப்பத் திருவிழா.... 

தைப்பூசச் தினத்தை ஒட்டி ஓட்டேரியில் உள்ள கந்தசாமி திருக்கோவிலில் 52 ஆவது தெப்பத்திருவிழா நடைபெற்றது.

சென்னை ஓட்டேரி குயப்பேட்டையில் உள்ள  கந்தசாமி திருக்கோவிலானது  400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கோவில்.  இத்திருக்கோவில் பெருமை வாய்ந்ததாக பார்க்கப்படுவது முருகப்பெருமானின் பக்தரான கிருபானந்த வாரியார் அவர்கள் தலைமையில் கும்பாபிஷேகம் ஏற்படுத்துவதற்கு மூல காரணமாக அமைந்திருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.  அதிலிருந்து வருட வருடம் தைப்பூசத் திருநாளில் தெப்பத் திருவிழாவானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுவதாகும் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற இத்திருக்கோவில் தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை மற்றும் கார்த்திகை தீபம் உள்ளிட்ட நாட்களில் வெகு விமர்சையாக இத்திருக்கோவில் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோன்று தைப்பூசம் போன்ற இந்த நாளில் ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் இத்திருக்கோவிலில் வழிபடுவது மட்டுமின்றி அவர்களுடைய நேர்த்திக்கடனையும் செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:    33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் இழப்பீடு குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!