குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்...

சங்கரன்கோயில் நெடுஞ்சாலைகளில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்...

தென்காசி | சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் நெடுஞ்சாலைதுறை சார்பில் புதிதாக சாலை விரிவாக்க பணிகள் மேற்க்கொண்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டது.

ஆனால் புதியசாலை போடப்பட்ட நாள் முதல் சாலையின் நடுவே ஒவ்வொரு பகுதியாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைவது மட்டுமின்றி குடிநீர் வினாக சாக்கடையில் கலப்பது வாடிக்கையாக வருகிறது.

மேலும் படிக்க | கழிவுநீர் வாய்க்காலை வெறும் கையால் சுத்தம் செய்த பணியாளர்கள்...

இந்நிலையில் இராஜபாளையம் மற்றும் திருநெல்வேலி செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்ட குழாய்கள் உடைந்து குடி தண்ணீர் வீணாக சாக்கடையில் செல்கிறது. மேலும் குழயாய் உடைப்பு ஏற்பட்ட இடம் பள்ளமாக காணப்படுகிறது.

அரசு மருத்துவமனை, முன்பு உள்ள சாலையில் உடைப்பு ஏற்ப்பட்டு பல மாதங்களாக தண்ணீர் தேங்கி பள்ளமாக இருப்பதனால் ஆம்புலன்ஸ் உட்பட அனைத்து வாகனங்களும் பள்ளதில் விழுந்து ஊர்ந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நிலச்சரிவு அபாயம்... பொக்லைன் எந்திரம் பயன்படுத்த தடை...

மேலும் இது வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிதண்ணீர் வீணாவதாக கூறப்படுகிறது.

அதனால் ஏற்பட்ட பள்ளத்தினால் பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு அதனை சரிசெய்ய குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.

மேலும் படிக்க | மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்த வீடியோ...