கழிவுநீர் வாய்க்காலை வெறும் கையால் சுத்தம் செய்த பணியாளர்கள்...

புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில் வெறும் கைகளால் தொழிலாளர்கள் கழிவுகளை அகற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் வாய்க்காலை வெறும் கையால் சுத்தம் செய்த பணியாளர்கள்...

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் வெறும் கைகளால் தொழிலாளர்கள் கழிவுகளை அகற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரசு இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லக்கூடாது, கழிவு நீர் வாய்க்காலில் துப்புரவு பணி மேற்கொள்ளும்போது பாதுகாப்பு உபகரணங்களோடு சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்ற அறிவுறுத்தலும் உள்ளது, அரசின் உத்தரவும் உள்ளது.

மேலும் படிக்க | நிலச்சரிவு அபாயம்... பொக்லைன் எந்திரம் பயன்படுத்த தடை...

இந்நிலையில் புதுச்சேரி சோனாம்பாளையம் அருகேவுள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் எதிரில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு கையுரை, காலில் அணியும் உரை ஏதுமின்றி வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள் இது குறித்து அந்த தொழிலாளர்களிடம் கேட்டபோது தங்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரனமும் வழஙகவில்லை.

மேலும் படிக்க | இன்னும் இந்த சிக்னல் எத்தனை காவு வாங்க போகுதோ?

இதை சுத்தம் செய்தால் தான் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என தெரிவித்தனர். பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் துப்புரவு தொழிலாளர்களின் பணி சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியது. அரசு வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திறனற்ற திமுக அரசு