செல்போன் கடை ஷட்டரை உடைத்து காஸ்ட்லி போன்களை திருடும் மர்ம நபர்...

காவல் நிலையம் அருகேயே திருடி செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செல்போன் கடை ஷட்டரை உடைத்து காஸ்ட்லி போன்களை திருடும் மர்ம  நபர்...

நாகை | நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 10,மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற இவர் நேற்று காலை கடையை திறக்க வந்துள்ளார்.

அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, ஷோகேஸில் அடுக்கி வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த 15, செல்போன்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

மேலும் படிக்க | வடமாநில தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வழக்கில் மூன்று பேர் கைது!

இது குறித்து கணேஷ்குமார் அளித்த புகார் பேரில் அங்கு வந்த வெளிப்பாளையம் போலீசார் கைரேகை நிபுணர்களை கொண்டு சோதனை நடத்தினர். மேலும் அப்பகுதி கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து திருடர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே செல்போன் கடை ஷட்டரை கட்டர் இயந்திரத்தால் உடைத்து, விலை உயர்ந்த செல்போன்களை திருடி செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | பைக்கில் வழிமறித்து 437 கிராம் தங்கம், ரூ.6 லட்சம் கொள்ளை...