வடமாநில தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வழக்கில் மூன்று பேர் கைது!

வடமாநில தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வழக்கில் மூன்று பேர் கைது!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்சல் தசாங் (44). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம் பாளையத்தில் குடியிருந்து கொண்டு பனியன் கம்பெனி ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பல்லடம் திருப்பூர் சாலை சின்னக்கரை பகுதியில் நின்றிருந்த பனியன் தொழிலாளி அப்சல் தசாங்கை அங்குள்ள பள்ளிவாசலின் பின்புறம் மிரட்டி அழைத்துச் சென்ற மூன்று மர்ம ஆசாமிகள் அந்த வட மாநில தொழிலாளியை மிரட்டி செல்போன் மற்றும் 200 ரொக்க பணத்தையும் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்சல் தசாங் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் குற்றப்பிரிவு போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று மர்ம ஆசாமிகளை தேடி வந்த நிலையில் சின்னக்கரை பேருந்து நிறுத்தம் அருகே பதுங்கி இருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பேச்சியப்பன் 22,கோவை வால்பாறையை சேர்ந்த ராம்பிரகாஷ் 22 மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்த குற்றப்பிரிவு போலீசார் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.