தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான மிதவை...! கடற்கரையில் கரை ஒதுங்கியது...!

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான மிதவை...! கடற்கரையில் கரை ஒதுங்கியது...!

கடல் நீரின் தரத்தை ஆய்வு செய்ய உதவும், தேசிய கடலோர ஆய்வு மையத்தின் (National centre for coastal research) மிதவை, மாண்டஸ் புயல் காரணமாக கடலில் காற்றில் அடித்து வரப்பட்டு மெரினா கடற்கரையில் மாநில கல்லூரிக்கு எதிரே கரை ஒதுங்கியது.

குறிப்பாக இந்த மிதுவையானது கடல் நீரில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கடலுக்குள் உள்ள நிலப்பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கடல் நீரின் தன்மைகள் ஆகியவை குறித்து தேசிய கடல் சார் ஆய்வு மையத்தின் சார்பில் பயன்படுத்தக்கூடிய கருவியாகும். தற்போது மாண்டஸ் புயல் எதிரொலியாக கடல் அலைகளின் அளவுக்கு அதிகமான சீற்றத்தின் காரணமாக இந்த மிதவையானது சென்னை காமராஜ் சாலையில் அமைந்துள்ள மாநில கல்லூரிக்கு எதிரே கடல் நீரில் தரை தட்டி கரை ஒதுங்கியது. 

இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை சேப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் ஒன்றிணைந்து கடல் நீரில் அடித்து கரை ஒதுங்கிய 6 அடி உயரம் கொண்ட மிதவையை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் போலீசார் தரப்பில் மீட்கப்பட்ட மிதவையை, தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆராய்ச்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் செந்தில்குமார், நாட்டின் சொத்தை தமிழக காவல்துறையினர் இக்கட்டான நிலைமையிலும் மீட்டு தரவுகளுடன் ஒப்படைத்துள்ளனர். அதனால் காவல் துறையினருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். 

இதையும் படிக்க : சபரிமலை கோவில் : 24 நாட்களில் இவ்வளவு வருமானா...?