பதுக்கி வைக்கப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...

ராஜபாளையம் அருகே கல்குவாரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசியை அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பதுக்கி வைக்கப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...

விருதுநகர் | ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இக் கல்குவாரி குறித்து ஆய்வு செய்வதற்காக சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் சென்றிருந்தார். அவர் செல்லும் போது எதிரே டெம்போ வாகனம் வந்துள்ளது.

அதை நிறுத்தி விசாரணை செய்த போது ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். ஆய்வு செய்ததில் அதில் அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி மூடைகள் இருந்துள்ளது.

மேலும் படிக்க | 65 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க எழும்பூர் ரயில்வே காவல் துறை...!

அருகே உள்ள கல்குவாரியில் இருந்து அரிசி மூடைகளை எடுத்து செல்வதாக ஓட்டுனர் தெரிவித்துள்ளார். அவரது தகவலின் பேரில் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன் உள்ளிட்டோர் காவல் துறையினர் பாதுகாப்புடன் கல் குவாரியில் சோதனை நடத்தினர்.

அங்கிருந்த குடோனில் ரேஷன் அரிசியை சாக்கு மாற்றி மூடைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த நேரத்தில் டெம்போ வாகன ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார்.

மேலும் படிக்க | அனுமதியின்றி மண் திருடிய 3 லாரிகள் பறிமுதல்... அதிரடியாக களம் இறங்கிய வட்டாட்சியர்...

ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 மூடைகள் மற்றும் டெம்போ வாகனத்தில் கடத்தி சென்ற 35 மூடைகள் என 285 மூடைகளில் இருந்த 15 டன் ரேஷன் அரிசி மற்றும் டெம்போ வாகனத்தை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் மற்றும் வாகனம் உணவு பொருள் கடத்தல் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க | 2 கையெறி குண்டுகளை கைப்பற்றிய போலீசார்...

கல்குவாரியில் நடத்திய ஆய்வில் முறையான அனுமதியின்றி சிலை செய்வதற்காக பெரிய அளவிலான கற்கள் இரவு நேரத்தில் வெட்டி எடுத்து செல்வதும் தெரிய வந்தது.

எனவே அனுமதியின்றி பெரிய அளவிலான கற்களை எடுத்து சென்ற லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கல் குவாரியின் உரிமையாளர் குறித்தும், தப்பி ஓடிய ஓட்டுனர் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | கருவறையை படம்பிடித்தால் நடவடிக்கை! - பழனி கோவில் நிர்வாகம் அதிரடி