65 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க எழும்பூர் ரயில்வே காவல் துறை...!

65 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க எழும்பூர் ரயில்வே காவல் துறை...!

65 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் இளையராஜா சந்தேகத்திற்கிடமாக சுற்றிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.  அவரிடம் ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாத காரணத்தினால் அவரிடம் உள்ள உடமைகளை சோதனை மேற்கொண்டுள்ளார்கள்.  அதில் கட்டு கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவனேசன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள் விசாரணையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜமீல் அகமத் என்பதும், மேலும் அவரிடம் உள்ள கைப்பையை ஸ்கேனர் இயந்திரம் மூலம் சோதனை செய்ததில் 80 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரியவந்தது.  இதனுடைய இந்திய மதிப்பு 65,44,000 ரூபாய் எனவும் இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவனேசன் ஜமீல் அஹ்மத் மற்றும் அவர் கொண்டு வந்த 65 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் அமலாக்கத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அண்ணா நினைவுதினம்.... நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி!!!