அண்ணா நினைவுதினம்.... நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி!!!

அண்ணா நினைவுதினம்.... நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி!!!

பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தையொட்டி அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

அறிஞர்  அண்ணாவின் 54வது  நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பாக  அமைதிப் பேரணி நடைபெற்றது.  சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரையில் நடைபெற்ற அமைதி பேரணியை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  

பின் பேரணியாக அண்ணா நினைவிடம் வந்து மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  அவரை தொடர்ந்து  துரைமுருகன்,டி.ஆர் பாலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  அதனை தொடர்ந்து கலைஞர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி சென்றனர்.

இதில் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, அமைச்சர்கள் பொன்முடி, மா.சுபிரமணியன், சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் என பல்லாயிர கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   முதலமைச்சருக்கு ஷூ வாங்கிய ஷர்மிளா.... தன்னுடன் பாதயாத்திரை வரக் கூறி சவால்!!!