காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்கா அதிபர்...!

காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்கா அதிபர்...!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் எகிப்தில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எகிப்து, கம்போடியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், எகிப்தில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற உச்சிமாநாடு, கம்போடியாவில் நடைபெறும் ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு மற்றும் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலநிலை மாற்றம், ரஷியா உக்ரைன் போரின் உலகளாவிய தாக்கம், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள அவர் ஜி20 கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : ஐடி சட்ட விதிகள் திருத்தம்....மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கண்டனம்...!!!