பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு ஒன்று  பாறையில் சிக்கியதால் பரபரப்பு

பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு ஒன்று  பாறையில் சிக்கிய நிலையில், மீனவர்கள் படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாம்பன் ரயில் தூக்கு பாலம் இன்று 25/08/2021 காலை திறக்கப்பட்டது தொடர்ந்து வடக்கு பகுதியில் இருந்து மீன்பிடி விசைப் படகுகள் தெற்கு பகுதியை நோக்கி கடந்து சென்றன தொடர்ந்து வந்த விசைப்படகில் ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்று விசைப்படகு ஒன்றும் நீரோட்டம் குறைவாக இருந்ததால் பாறையில் சிக்கி நின்றது.

படகை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர் தொடர்ந்து படகுகள் கடந்து செல்வதற்காக ரயில் தூக்குப் பாலம் திறந்த நிலையில் இருந்தது நீண்ட நேரம் காத்திருக்க பிறகு இரண்டு படகுகளும் பாறைகளில் இருந்து மீட்கப்படாமல் இருந்த காரணத்தால் ரயில் தூக்கு பாலத்தை ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் தூக்கு பாலம் மூடப்பட்டது 

பாம்பன் பாக் ஜலசந்தி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகாலை முதலே கடல் நீர் மட்டம் குறைந்து கரையோரங்களில் கடல் உள்வாங்கும் காணப்பட்டது இந்நிலையில் ரயில் தூக்கு பாலத்தில் நடுப்பகுதியில் நீர்மட்டம்: நீரோட்டம் குறைந்து அடியில் கிடந்த பாறைகள் தெரியும் அளவிற்கு காட்சியளித்தன