இருஅமர்வு நீதிபதியின் தீர்ப்பை எதிர்க்கும் ஓபிஎஸ்...அடுத்த மூவ் என்ன?

இருஅமர்வு நீதிபதியின் தீர்ப்பை எதிர்க்கும் ஓபிஎஸ்...அடுத்த மூவ் என்ன?

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மேல்முறையீடு செய்கிறார்.

ஈபிஎஸ் மேல்முறையீடு:

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

உயர்நீதிமன்றம் தீர்ப்பு:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி,  சுந்தர் மோகன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது. 

இதையும் படிக்க: மீண்டும் எடப்பாடி கதவை தட்டும் ஓபிஎஸ் டீம்....ஈபிஎஸ் வகுக்கும் யூகம் என்ன?

ஓபிஎஸ் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்: 

இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

சட்டரீதியான ஆவணங்கள்:

அதன்படி, உச்சநீதிமன்றத்தில் நேற்று ஓபிஎஸ் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சட்டரீதியாக சில ஆவணங்களை சேர்க்க வேண்டும் என்பதால், இன்று அவர் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வார் எனக்கூறப்படுகிறது.

முன்னதாக அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தங்களுடைய தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது எனக் கோரி ஈபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.