தன்பாலின திருமணத் தீர்ப்பு: இயக்குநர் பா. ரஞ்சித் எதிர்ப்பு

தன்பாலின திருமணத் தீர்ப்பு:  இயக்குநர் பா. ரஞ்சித் எதிர்ப்பு

தன்பாலின திருமணம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் தனியார் வைத்தியசாலை தொடக்க நிகழ்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு,  நடிகர்கள் நந்தகுமார், சௌந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ரஞ்சித்:-   
தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டமாக இருக்கும் நிலையில்,  சட்ட அங்கீகாரம் மறுப்பது, உள்நோக்கங்கள் உள்ள தீர்ப்பாக பார்க்கப்படுவதாக கூறினார். மேலும்,தங்கலான் டீசர்  அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிக்க   | "இந்தியா என்ற தனது வீட்டுக்காக பாஜகவை எதிர்ப்பேன்" - ராகுல் காந்தி