”நீட் தேர்வினை எப்போது ரத்து செய்வீர்கள்”பெற்றோரின் கேள்விக்கு ஆளுநரின் திட்டவட்ட பதில்!

”நீட் தேர்வினை எப்போது ரத்து செய்வீர்கள்”பெற்றோரின் கேள்விக்கு ஆளுநரின் திட்டவட்ட பதில்!

நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடனான உரையாடல் நிகழ்வு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒரு மாணவரின் தந்தை நீட் தேர்வினை எப்போது ரத்து செய்வீர்கள் என்று கேட்ட போது, நீட் தேர்வில் இருந்து  ஒரு போதும்  விலக்கு அளிக்க முடியாது என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நீட் தேர்வின் மூலம் தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கும் எளிதாக வாய்ப்புகள் அமைவதாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு  தனி விழுக்காடு ஒதுக்கி அவர்கள் மருத்துவம் படிக்க மிகவும் உதவியாக அமைந்துள்ளதாக கூறினார்.

இதையும் படிக்க : ”நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்திட மாட்டேன்...” செல்வபெருந்தகை கண்டனம்!

நீட் தேர்வினை ரத்து செய்தால் மாணவர்களின் கல்வி, கற்றல் திறன் குறைந்து விடும் என்றும், அதனால் எந்த காலத்திலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

அப்போது, ஆளுநரின் கருத்துக்கு எதிராக பேசிய  மாணவனின் பெற்றோரிடமிருந்து மைக் பறிக்கப்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.