சாதிக்க வயது தடையல்ல....சாதித்து காட்டிய 94 வயது பகவானி!

சாதிக்க வயது தடையல்ல....சாதித்து காட்டிய 94 வயது பகவானி!

94 வயதான பகவானி தேவி தாகர் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022இல் தங்கம் மற்றும் வெண்கலம பதக்கங்களை வென்றுள்ளார்

ஞாயிற்றுக்கிழமை, ஃபின்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022ல் இந்தியாவின் சார்பில் 94 வயதான பகவானி தேவி தாகர் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவைச் சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தாகர், 2022-ம் ஆண்டு நடைபெற்று வரும் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 மீட்டர் ஓட்டத்தில் 24.74 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதனுடன், குண்டு எறிதலிலும் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளர்.

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பகவானி தேவி மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு, 2022 உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சார்பில் கலந்துக்கொள்ள  பகவானி தேவி தகுதி பெற்றதாக தெரிகிறது.


இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வாழ்த்து:

சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை இந்தியாவின் 94 வயதான பகவானிதேவி மீண்டும் நிரூபித்துள்ளார் என
விளையாட்டுத் துறை அமைச்சகம் பகவானி தேவிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளது.

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப், 2022 என்பது:

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் என்பது 34 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கான தடகள விளையாட்டுக்கான ) உலக சாம்பியன்ஷிப்  நிகழ்வாகும்.  இந்த போட்டி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பொதுவானது. 

2022 உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் உலக மாஸ்டர்ஸ் தடகள  சாம்பியன்ஷிப் தொடரில் 24வது தொடராகும். இந்த ஆண்டு, 2022 ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை பின்லாந்தின் டம்பேரில் நடைபெற்றது.

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி உலக தடகளத்தால் முதுநிலை வயதுடைய போட்டியாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டுப்போட்டியாகும்.