ஏன் இப்படி நடக்குது.. சிஎஸ்கே அணிக்கு மட்டும்.. தீபக் சஹார் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்? சிஎஸ்கே நிலைமை என்ன?

என்னடா இது சென்னை அணிக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ஏன் இப்படி நடக்குது.. சிஎஸ்கே அணிக்கு மட்டும்.. தீபக் சஹார் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்? சிஎஸ்கே நிலைமை என்ன?

சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் அடுத்த போட்டியில் களமிறங்குவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு பெரும் சிக்கல் கிளம்பியுள்ளது.

15வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் மார்ச் 16ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், புதிய அணிகள் வென்று வரும் நிலையில், 4 முறை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

சென்னை அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பவுலர் தீபக் சஹார் இல்லாதது தான். காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக  தீபக் சஹாரால் விளையாட முடியவில்லை. இதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் தங்கி காயத்திலிருந்து மீண்டு வரும் பயிற்சியில் ஈடுபட்டார். ஏப்ரல் 26ஆம் தேதிக்குள் சிஎஸ்கே அணிக்குள் வந்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை அணியும் நம்பிக்கையுடன் இருந்தது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டு வந்த தீபக் சஹாருக்கு முதுகு பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காலில் ஏற்பட்ட பிரச்சனை சரியாகி வரும் நிலையில், தற்போது இரண்டாவதாக முதுகில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது மிக கடினம் என கூறப்படுகிறது.

சென்னை அணி இன்று இரவு ஆர்சிபியுடன் மோதுகிறது. தீபக் சஹார் இடத்தை தற்போது முகேஷ் சௌத்ரி, டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் நிரப்பி வருகின்றனர். எனவே தற்போதுள்ள வீரர்கள் புத்துணர்ச்சி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.