1.5 கிலோ கஞ்சாவை கள்ளச்சந்தையில் விற்ற ஏழு காவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்.

கஞ்சா வியாபாரியிடம் இருந்து கைப்பற்றிய 1.5 கிலோ கஞ்சாவை கள்ளச்சந்தையில் விற்ற ஏழு காவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1.5 கிலோ கஞ்சாவை கள்ளச்சந்தையில் விற்ற ஏழு காவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்.

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி நகரில் உள்ள ஏ.பி.எம்.சி காவல்நிலைய கண்காணிப்பாளர்,  துணை கண்காணிப்பாளர்கள்  மற்றும் 3 கான்ஸ்டபிள்கள் ஆகியோர், கடந்த 30 ஆம் தேதி கஞ்சா வியாபாரி வீட்டில் சோதனை செய்து 1.5 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா உடன் 3 கஞ்சா வியாபாரிகளை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் பேரம் பேசி லஞ்சம் பெற்று வழக்கு பதிவு செய்யாமல் அவர்களை விடுவித்தனர். அதுமட்டுமில்லாமல் கைப்பற்றிய கஞ்சாவை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்து அந்த பணத்தையும் காவல் நிலைய குழு எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை ஹூப்பள்ளி நகரிலுள்ள சில பத்திரிகைகள் வெளியிட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஹூப்பள்ளி மாவட்ட காவல்துறை ஆணையர் லாபூ ராம் டிசிபி ராமராஜனுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

டிசிபி ராமராஜன் நடத்திய விசாரணையில் இந்த விவகாரம் உண்மை என தெரியவந்த நிலையில் சம்பந்தப்பட்ட 7 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தும் அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்தவும் ஹூப்பள்ளி மாவட்ட காவல்துறை ஆணையர் லாபூ ராம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் கஞ்சா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்று அவர்களை சட்டவிரோதமாக விடுவித்து விட்டு அவர்களிடம் கைப்பற்றிய கஞ்சாவை கள்ள சந்தையில் விற்ற சம்பவம் வேலியே பயிரை மேய்ந்த கதை என்ற பழமொழியை உறுதி செய்துள்ளது