மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு...மத்திய அரசு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு  பணி ஒத்திவைப்பு...மத்திய அரசு

மக்கள் தொகை கணக்கெடுப்பு  பணி நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்கள் தொகை பற்றிய தகவல்களை திரட்டுவதற்கு முன்னோடியாக அமையும், புதிய நிர்வாக பகுதிகளை உருவாக்கக்கூடாது என்ற  தேசிய பொது பதிவாளர் பிறப்பித்திருந்த உத்தரவானது, ஜூன் 2022ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாநிலம் துவங்கி பஞ்சாயத்து வரை புதிய நிர்வாக அமைப்புகள் எதனையும் உருவாக்கக் கூடாது என்ற  தடை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்னோடியான நடவடிக்கையாகும்.

இதன்படி மாவட்ட அளவில் தொடங்கி வீடுகள் வரையான கணக்கெடுப்புக்கு ஜூன் மாதம் வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான தகவல்களை திரட்டும் பணி செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது  குறிப்பிடத்தக்கது.