ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை..!

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆருகே, ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 10 உயர்த்தி வழங்கிட கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆவின் நிறுவனம் முன்பு  பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரி விவசாயிகள் ,பால் உற்பத்தியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலுக்கு தற்போது உள்ள  விலையை விட ரூபாய் 10 உயர்த்திட வழங்க வேண்டும் எனவும், தீவனம் மற்றும்  கால்நடைகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது எனவும், 

மேலும்  தனியார் நிறுவனங்கள் ஆவினை காட்டிலும் பாலுக்கு கூடுதல் விலை கொடுக்கிறது; இதனால்  சங்கங்கள் மூடுவதை தடுத்து நிறுத்த பால் கொள்முதல் விலையை ரூபாய் 10 உயர்த்தி வழங்க வேண்டும்”, என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

மேலும் தமிழ்நாடு அரசு ஒரு லிட்டருக்கு ரூபாய் 1 வீதம் ஊக்கத்தொகை அறிவித்தது வெறும் கண்துடைப்பு என்றும், மறுபரிசீலனை செய்து லிட்டருக்கு ரூபாய் ஐந்து ஊக்க தொகை உயர்த்தி வழங்க  வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மற்றும்   தரமான கால்நடை தீவனங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்; ஆவின் நிறுவனத்தில் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் ஊழல் தடுத்து நிறுத்த வேண்டும்; கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்;

வட்டி இல்லாமல் ஆரம்ப கூட்டுறவு பால் சங்கங்கள் மூலம் பால் மாடு வாங்க கடன் வழங்கிட வேண்டும்; புதிய கூட்டுறவு பால் பண்ணையை துவங்க நடைமுறையை எளிதாக்க வேண்டும்; உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் காரைக்குடி ஆவின் நிறுவனம் அன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இதில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த   ஆண் மற்றும் பெண் விவசாயிகள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  | சாந்தன் முருகன் மனுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை.!