"பாஜகவின் ஓர் அணிதான் வருமான வரித்துறை" - உதயநிதி ஸ்டாலின்

பாரதிய ஜனதா கட்சியின் ஒர் அணிதான் வருமான வரித்துறை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்ற அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கையெழுத்து பெற்றார்.

இதையும் படிக்க : தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்! - ராமதாஸ்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், விசாரணை அமைப்புகளின் சோதனைகளை சட்டப்படி சந்திப்போம் என்றார். தொடர்ந்து பேசியவர், பாரதிய ஜனதா கட்சியின் ஓர் அணிதான் வருமான வரித்துறை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

முன்னதாக, அதிகாலை முதலே அமைச்சர் ஏ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.