கர்நாடக தேர்தலுக்கு பின் திடீர் திருப்பம்..! மல்லிகார்ஜுன கார்கே மீது அவதூறு வழக்கு...!

கர்நாடக தேர்தலுக்கு பின் திடீர் திருப்பம்..!   மல்லிகார்ஜுன கார்கே மீது அவதூறு வழக்கு...!

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. அத்தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து, தற்போது முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த தேர்தலின் போது,  ' பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா ' போன்று பஜ்ரங் தள் அமைப்பையும் தடை செய்வோம் என மல்லிகார்ஜுன கார்கே அறிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்திய  காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  மீது சங்கரூர்  நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றம் சார்பில் கார்கே -வுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஹிந்து சுரக்ஷா பரிஷத் பஜ்ரங் தள் ஹிந்த் அமைப்பின்  நிறுவனரான சங்கரூரைச் சேர்ந்த ஹிதேஷ் பரத்வாஜ், சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தலின் போது பஜ்ரங் தளம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கார்கே மீது சங்கரூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சிவில் நீதிபதியின் (மூத்த பிரிவு) ராமன்தீப் கவுர் ஜூலை 10 ஆம் தேதி கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க    }  சவுக்கு சங்கர்‌ மீது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குப் பதிவு...!!

அதன்படி,  பஜ்ரங் தள் தடை என்ற பொருளில் காங்கிரஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது தொடர்பாக,  பஜ்ரங் தள் அமைப்பை, தேச விரோத அமைப்புகளுடன் ஒப்பிட்டதாகக் கூறி 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, பஜ்ரங் தள் அமைப்பின் சார்பாக பஞ்சாப்பின் சங்கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இது குறித்து பரத்வாஜ் கூறுகையில்,....  தேர்தல் அறிக்கையின் 10-வது பக்கத்தில், பஜ்ரங்தளத்தை தேச விரோத அமைப்புகளுடன் காங்கிரஸ் ஒப்பிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றால் அதைத் தடைசெய்வதாக உறுதியளித்ததைக் கண்டு தான் கடந்த 11-ம் தேதி அன்று நீதிமன்றத்தில் பிகர் அளித்ததாக கூறினார். 

இதையும் படிக்க    } கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியில் மாற்றம்...!