இமாச்சலில் மீண்டும் ஒரு நிலச்சரிவு

இமாச்சல பிரதேசத்தில் சென்னாப் நதி நீரின் ஓட்டத்தை தடுக்கும் அளவுக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இமாச்சலில் மீண்டும் ஒரு நிலச்சரிவு

வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாங்கான பகுதிகள் பிடிப்பு தன்மையை இழந்து, ஆங்காங்கு நிலச்சரிவு ஏற்படுகின்றன.  அண்மையில் இமாச்சல பிரதேசம் கின்னாவூரில் ஏற்பட்ட நிலச்சரிவு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றபோது, இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், ராட்சத பாறைகளுக்கு இடையே பலர் சிக்கிக்கொண்டனர். இந்தநிலையில் இடிபாடுகளிலிருந்து 15 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் Lahaul மற்றும் Spiti மாவட்டத்தில் உள்ள நல்டா கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. செனாப் நதியின் நீர் ஓட்டத்தையே தடுக்கும் அளவிற்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நதியிலிருந்து 10 முதல் 15 சதவீதம் நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருவதாகவும் மாநில பேரிட மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலச்சரிவால் உயிரிழப்போ அல்லது பொருட்சேதமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.