அமைச்சர் தங்கம் தென்னரசு சொத்து குவிப்பு வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் தங்கம் தென்னரசு சொத்து குவிப்பு வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு!

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு  விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை டிசம்பர் எட்டாம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த தி.மு.க ஆட்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது  விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு அவரின் மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.

வழக்கிலிருந்து  தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை விடுவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.  

இதையும் படிக்க: "10 ஆண்டுகளில் யானையை பார்க்க முடியாது" உயர்நீதிமன்றம் வேதனை!