பல்கலைக்கழக முறைகேடு...ஆளுநரை விசாரியுங்கள்- நாராயணசாமி! 

பாஜக ஆட்சிக்கு வந்தால் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் என்றார்கள். 50 லட்சம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை.

பல்கலைக்கழக முறைகேடு...ஆளுநரை விசாரியுங்கள்- நாராயணசாமி! 

புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு அரசு

அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி நாட்டு மக்களிடத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் என்றார்கள். 50 லட்சம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை. மக்களை ஏமாற்றும் வேலையை மட்டுமே பிரதமர் மோடி செய்வதாக விமர்சனம் செய்தார்.

மேலும் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டுள்ளது என்றும் பாராட்டினார். பாஜக இதை அரசியலாக்குகின்றது என்றார். தொடர்ந்து பேசிய அவர் பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துதான் வருகின்றது.  

மேலும் படிக்க : அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை...நிர்வாக சீர்திருத்தத் துறை தகவல்!

அனுதாபத்தை பெற முடியாது

பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டு மக்களின் அனுதாபத்தை பெற முடியாது.பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியாலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புதுச்சேரியில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என சுய விளம்பரத்திற்காக பாஜகவினர் கூறியுள்ளார்கள். அவர்களால் இயலுமா? அப்படி செய்ய முடியாவிட்டால் அரசியலை விட்டு விலகி செல்ல பாஜக தயாரா? என கேள்வியெழுப்பிய அவர்  விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவித்து மூன்று மாதம் ஆகியும் தள்ளுபடி செய்யாததால் விவசாயிகள் கடன்பெற இயலாமல் தவித்து வருகின்றார்கள் ஆகவே கூட்டுறவு கடனை உடனடியாக  தள்ளுபடி செய்ய முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க : புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை!

பருவமழை தொடக்கம்

தொடர்ந்து பேசிய நாராயணசாமி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் புதுச்சேரி அரசு எடுக்கவில்லை. வாய்க்கால், ஏரிகள் தூரவாரப்படவில்லை. பருவமழையின் போது பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றவர் புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது. அதில் மதுக்கடைகளும் அடங்குமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க : மாவட்ட ஆட்சியரின் பெயரில் மோசடியில் ஈடுபட முயற்சி!

விசாரணை தேவை

மேலும் முறைகேடு புகார் வந்ததால் புதுச்சேரி அரசு பொறியல் கல்லூரி பதிவாளரை துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்கின்றார். அந்த உத்தரவை ரத்து செய்து 2 மணி நேரத்தில் மாற்றி ஆளுநர் ஒரு உத்தரவிடுகின்றார்.

இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய நாராயணசாமி, பத்திரிக்கையாளர்களை தரமற்ற முறையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தனது கண்டனத்தையும் பதிவு செய்வதாகவும் கூறினார்.