அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை...நிர்வாக சீர்திருத்தத் துறை தகவல்!

அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை...நிர்வாக சீர்திருத்தத் துறை தகவல்!

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் காலதாமதமாக வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிர்வாக சீர்திருத்தத் துறை சிறப்பு செயலாளர் கேசவன் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களிலும் கடந்த சில நாட்களாக ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

துறைச் செயலாளர்களுக்கு சுற்றறிக்கை

இவ்விவகாரம் புதுச்சேரி சட்டமன்றத் தலைவர் செல்வம் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. சட்டமன்றத் தலைவர் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி நிர்வாக சீர்திருத்த துறை சிறப்பு செயலர் கேசவன் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.  

மேலும் படிக்க : மாவட்ட ஆட்சியரின் பெயரில் மோசடியில் ஈடுபட முயற்சி!

ஒழுங்கு நடவடிக்கை

அதில், அரசு அலுவலகங்களில் காலதாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார், மேலும் துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்கள் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார், மேலும் அவர்கள் ஆய்வு குறித்த அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.