தயாராகும் ஜல்லிக்கட்டு ஆரவாரம்... ஆர்வமுடன் முன்பதிவு செய்யும் வீரர்கள், காளை உரிமையாளர்கள்...

ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியது, ஆர்வத்தோடு மாடு உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

தயாராகும் ஜல்லிக்கட்டு ஆரவாரம்... ஆர்வமுடன் முன்பதிவு செய்யும் வீரர்கள், காளை உரிமையாளர்கள்...

மதுரை | அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாக்களில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

தைப்பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி அவனியாபுரம், 16ஆம் தேதி பாலமேடு மற்றும் 17ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாக்கள் நடைபெற உள்ளன. இந்த விழாக்களில் பங்குபெறும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

மேலும் படிக்க | கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்...

அதன்படி இன்று பகல் 12 மணிக்கு இதற்கான பிரத்யோகமாக கொடுக்கப்பட்ட இணையதள முகவரியில் ஆன்லைன் பதிவு தொடங்கியது. காலை 12 மணிக்கு துவங்கிய ஆன்லைன் முன்பதிவில் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த திரளான ஜல்லிக்கட்டு மாடு உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளுக்காகவும் தங்களுக்காகவும் முன்பதிவு செய்தனர்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் மருத்துவரிடம் வாங்கிய உடற்தகுதி சான்றிதழ் மற்றும் உரிமையாளரின் ஆதார் கார்டு இணைத்து தங்களது காளைகளின் கொம்புகளின் உயரம், காளைகளின் உயரம் அனைத்தையும் முறையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பின்னர் ஆன்லைன் முன்பதிவு செய்வததற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்றுச் சென்றனர்.

மேலும் படிக்க | ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த விபரீதம்...முதல் நாளேவா...?

அதேபோன்று மாடுபிடி வீரர்கள் தங்களது ஆதார் கார்டு மற்றும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சான்றிதழ் உள்ளிட்டவைகளை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து பின்னர் அதற்கான ஒப்புக் சீட்டை பெற்றுச் சென்றனர்.

இவ்வாறு இன்று முன்பதிவில் பதிவு செய்துள்ள ஜல்லிக்கட்டு மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இரண்டு தினங்களில் முறையாக அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தரப்பட்டு பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | களத்தில் இறங்கிய காளைகள்...முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்...எங்கே தெரியுமா?