சாரல் மழையால் வெறிச்சோடிய ஏற்காடு...

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடும் பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

சாரல் மழையால் வெறிச்சோடிய ஏற்காடு...

சேலம் | ஏற்காட்டில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு குளிர் வாட்டி வருகிறது.

பொதுவாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில்  பரபரப்பாக காணப்படும் ஏற்காடு அண்ணா பூங்கா சாலை, படகு இல்ல சாலைகள், ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில்  சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் படிக்க | விடாமல் பெய்த கனமழையால்...தண்ணீரில் சாய்ந்த நெற்பயிர்கள்...!

மேலும் கடும் பனிமூட்டத்தால் படகு இல்ல ஏரியில் 2 அடி தூரம் கூட தெரியாததால் துடுப்பு படகு மற்றும் பெடல் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் படகு சவாரி மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த கடும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழையால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லக்கூடிய அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம்,லேடி சீட், ஜென்ஸ் சீட் போன்ற இடங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் படிக்க | சென்னை மற்றும் சுட்டுவட்டார பகுதிகளில் வானிலை முன்னறிவுப்பு...

மேலும்  5 அடி தூரத்தில் வரும் வாகனங்கள் கூட   தெரியாத அளவிற்கு கடும் பனி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் பகல் நேரத்தில் கூட தங்களது வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே வாகனத்தை ஓட்டி சென்றனர்.

மேலும் ஏற்காட்டில்  நிலவி வரும் குளிரால்  இங்குள்ள உள்ளூர் வாசிகள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்... மீனவர்களுக்கு எச்சரிக்கை...