வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்... மீனவர்களுக்கு எச்சரிக்கை...

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்... மீனவர்களுக்கு எச்சரிக்கை...

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இலங்கையில் கரையை கடந்தது. இது  மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை வரை நிலவக்கூடும் என்பதால் மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

02.02.2023: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் படிக்க | ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

03.02.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள்,  மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

04.02.2023: குமரிக்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் படிக்க | கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு மழை தெரியுமா?