ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.02.2023) அதிகாலை  03:30 – 04:30 மணி அளவில் இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது  மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை (03.02.2023) நிலவக்கூடும்.

இதன் காரணமாக,

  • 02.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக  இடங்களிலும்,  வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

    இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | அதிகாலை முதலே தொடர் மழை... மக்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

  • 03.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக  இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை   பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
  • 04.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.

  • 05.02.2023 & 06.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் படிக்க | பாம்பன் தூத்துக்குடி துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்