பாம்பன் தூத்துக்குடி துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பன் தூத்துக்குடி துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதி காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அதிகாலை முதலே தொடர் மழை... மக்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை, கடலூர், நாகப்பட்டினம் எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது..