குப்பை வாங்க மறுத்த ஊராட்சி நிர்வாகம்; அலுவலகம் முன்பு குப்பையை கொட்டிய உணவக உரிமையாளர்!

குப்பை வாங்க மறுத்த ஊராட்சி நிர்வாகம்; அலுவலகம் முன்பு குப்பையை கொட்டிய உணவக உரிமையாளர்!

மேல்மலையனூரில் உள்ள ஹோட்டலில் கடந்த நான்கு நாட்களாக குப்பை வாங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஓட்டல் உரிமையாளர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் குப்பையை கொட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் தனியார் தாபா ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த நான்கு நாட்களாக குப்பை வாங்க துப்புரவு பணியாளர்கள் மறுத்துள்ளனர். குறிப்பிட்ட அந்த ஓட்டலில் மட்டும் குப்பை வாங்க வராததால், இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் ஹோட்டல் உரிமையாளர் முரளி முறையிட்டுள்ளார். இந்நிலையில் குப்பை எடுக்க சொல்லி பலமுறை நேரில் சென்று கூறியும் குப்பை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த உணவக உரிமையாளர் முரளி நேரடியாக குப்பைகளை எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:2024 தேர்தல்: INDIA கூட்டணி அமோக வெற்றி பெறும்; இணையத்தில் உலவும் கருத்துக்கணிப்பு!