உறவினர்களை இழந்து வறுமையில் வாடும் முதியவர்கள்...

உறவினர்களை இழந்து பேரன், பேத்தியுடன் உறைவிடம் இல்லாமல் வறுமையுடன் போராடி வரும் முதியவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உறவினர்களை இழந்து வறுமையில் வாடும் முதியவர்கள்...

ராணிப்பேட்டை | அகரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு தனது சகோதரியான ஞான சுந்தரி என்பவருடன் வசித்து வந்தார்.

ஞான சுந்தரியின் மகனும் மருமகளும் அண்மையில்  உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவர்கள் விட்டு சென்ற 2 குழந்தைகளுடன் முதியவர்கள் தனித்து விடப்பட்டார்கள். 

வசித்து வந்த வீடும் இடிந்து போன நிலையில் உறைவிடம் இல்லாமல் ஊருக்குள் அமைந்துள்ள மின்மோட்டார் பராமரிக்கும் 10க்கு 10 அறையில் கால, கை கூட  நீட்ட முடியாமல் வறுமையில் தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மனிதாபம் மறந்த மனிதர்களின் செயலால் அவதிக்குள்ளான மாடுகள்...

பேரன், பேத்திகளை படிக்க வைக்க முடியாமல், தங்க இடம் இல்லாமல் பொழுதை போராட்டமாக கடந்து வரும் இவர்கள் பல மனுக்கள் கொடுத்தும் அரசு சார்பில் யாரும் உதவ முன்வரவில்லை. 

ஊரில் வாழும் சமூக ஆர்வலர்கள் ஓன்றிணைந்து தென்னை குச்சிகளை கொண்டு தற்காலிக குடிசை ஓன்றை அமைத்து கொடுத்துள்ளனர். இந்த குடிசை எத்தனை நாள் தாங்கும் என்ற கேள்வி எழுப்பும் முதியவர்கள் வறுமையில் இருந்து மீள அரசு கருணை காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | பிரச்சனைகளுக்கு இடையில் கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டரில் மீட்பு...