மனிதாபம் மறந்த மனிதர்களின் செயலால் அவதிக்குள்ளான மாடுகள்...

மேய்ச்சலுக்கு சென்ற மூன்று கரவை மாடுகளை மனிதாபிமானம் இல்லாமல் கால், வால் மற்றும் தொடை பகுதியில் கொடுவாளால் வெட்டிய நபருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
மனிதாபம் மறந்த மனிதர்களின் செயலால் அவதிக்குள்ளான மாடுகள்...
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி | சங்கராபுரம் அருகே உள்ள மோட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு மனைவி நிரோஷா இவர் அதே கிராமத்தில் மூன்று கறவை மாடுகள் வைத்துக்கொண்டு  கூட்டுறவு பால் கொள்முதல் நிலையத்திலபால் ஊற்றி  பிழைப்பு நடத்தி வருகிறார்.

இவரது மூன்று கறவை மாடுகள் அதே கிராமத்தைச் சார்ந்த சாமிக்கண்ணு மகன் பிச்சன் என்பவர் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் நிரோஷாவின் மூன்று கறவை மாடுகள் மக்காச்சோளப் பயிர்களில் மேய்ந்துள்ளது.

இதைப் பார்த்த பிச்சன் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் மூன்று கறவை மாடுகளின் கால், வால், தொடை, மற்றும் வயிற்றுப் பகுதியில் கொடுவலால் வெட்டியுள்ளார். இதில் இரண்டு மாடுகளின் கால் எலும்பு முறிந்து பாதி துண்டானதால் நடக்க முடியாத நிலையில் அப்படியே வயலில் சாய்ந்து கிடந்துள்ளது.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் மாட்டின் கால் வெட்டப்பட்டுக் கிடப்பது குறித்து நிரோஷாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், பதறித் துடிதுடித்த படி ஓடிவந்து வெட்டுப்பட்டுக் கிடந்த மாட்டைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார் நிரோஷா மாட்டைக் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று டாக்டரிடம் காட்டியிருக்கிறார்.

மாட்டைப் பரிசோதித்த டாக்டர், கால் எலும்பு பலமாக சேதமடைந்துவிட்டது. இனி சரி செய்வது கடினம்' எனக் கூறியுள்ளார். தற்போது மாடு எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டு வருகிறது.

மேச்சிலிருந்த மாட்டை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் என் மூன்று கறவை மாட்டை கோட்டம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சன் என்பவர் கொடுவலால் வெட்டி உள்ளார் என சங்கராபுரம் காவல் நிலையத்தில் நிரோஷா புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சங்கராபுரம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேச்சலுக்கு சென்ற கரவை மாட்டை வெட்டி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com