800 காளைகள், 335 வீரர்கள் களம் காணும் பாலமேடு ஜல்லிக்கட்டு...

பாலமேட்டில் இன்று தொடங்கும் ஜல்லிக்கட்டில், அரசின் விதிகளின் படி 800-க்கும் மேற்பட்ட காளைகளும், 335 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

800 காளைகள், 335 வீரர்கள் களம் காணும் பாலமேடு ஜல்லிக்கட்டு...

மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் அவனியாபுரத்தில் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ஜல்லிக்கட்டில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும், 335 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம், உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

மேலும் படிக்க | சீறி பாயும் காளைகள்... அடக்க ஓடும் முரட்டுக் காளைகள்... களை கட்டும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்...

சிறந்த காளைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கும் கார் முதல் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. இரண்டாம் பரிசாக ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள கன்றுடன் கூடிய நாட்டு பசுவும், சிறந்த வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனமும் வழங்கப்பட உள்ளது. இரண்டாம் பரிசாக சிறிய ரக இருசக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது. 

ஜல்லிக்கட்டில், டோக்கன் நம்பர் வரிசையில் காளைகள் அவிழ்த்து விடப்படும் எனவும், மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நேரத்திற்குள் 800 முதல் ஆயிரத்து 200 காளைகளை அவிழ்த்து விடவும் விழா கமிட்டியினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி...