சீறி பாயும் காளைகள்... அடக்க ஓடும் முரட்டுக் காளைகள்... களை கட்டும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்...

தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சீறி பாயும் காளைகள்... அடக்க ஓடும் முரட்டுக் காளைகள்... களை கட்டும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்...

தைத்திருநாள் பொங்கல் பண்டிகை நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் களை கட்டியது. மக்கள் வீடுகளில் பொங்கல் வைத்து உழவர்களுக்கு நன்றி சொல்லி இத்திருநாளை கொண்டாடினர். இந்த நிலையில், உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

விவசாயத்துக்கு உறுதுணைக விவசாயிகளின் குடும்பத்தின் கால்நடைகளுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கும், பால் சுரக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி...

அதிகாலையிலேயே தங்கள் வீடுகளில் உள்ள பசுக்கள் மற்றும் காளைகளை நீராட வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரித்தனர். பின்னர், சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் படையலிடப்பட்டு வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்பட்டன.

பூஜைகள் முடித்தபிறகு, வண்ணம் பூசிய கொம்புகளுக்கு மணியை கட்டிவிட்டு ஊர்வலமாக மாடுகளை விவசாயிகள் அழைத்து சென்றனர். மாட்டுப் பொங்கல் தினத்தையொட்டி, கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

மேலும் படிக்க | புதுக்கோட்டையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியால் பரபரப்பு