நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த கன்று குட்டி...

திருக்கோவிலூர் அருகே நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டியை பொதுமக்கள் வியந்து பார்த்து சென்றனர்.
நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த கன்று குட்டி...
Published on: 
Updated on: 
1 min read

கள்ளக்குறிச்சி | திருக்கோவிலூர் அருகே  பழங்கூர்  கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (55) கிராமத்தில் விவசாயம் செய்துகொண்டு, விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு 10த்துக்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், ராஜேந்திரனுக்கு சொந்தமான  சினையாக இருந்த பசு மாடு ஒன்று இன்று  கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டிக்கு நான்கு கால்களும் இல்லாதததை பார்த்து அதன் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், பால் குடிக்க முடியாத கன்றுக்குட்டிக்கு பாட்டில் மூலம் பால் புகட்டி வருகிறார். நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த இந்த கன்று குட்டியை பழங்கூர் மற்றும் அதன் அருகாமையில் உள்ள கிராம பொதுமக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com