மேள தாளத்துடன் ஒரு ஊரே சேர்ந்து நடத்திய விநோத திருமணம்...

மேள தாளத்துடன் ஒரு ஊரே சேர்ந்து நடத்திய விநோத திருமணம்...

பாட்டு வாத்தியங்களுடன் உத்திரபிரதேசத்தில் இரண்டு நாய்களுக்கு ஒரு கிராமமே சேர்ந்து திருமணம் நடத்தியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Published on

உத்தரப்பிரதேசம் | மிருகங்களை வளர்க்கும் மனிதர்களுக்கு மிருகங்களை மனிதர்கள் போலவே பார்க்கும் ஒரு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில் செல்லப்பிராணிகளின் பெற்றோராகவே தங்களை பாவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், அலிகாரில் நாய்களுக்கு மேளதாளங்கள் முழங்கள் திருமணம் நடைபெற்ற விநோதம் நிகழ்ந்துள்ளது.

அலிகாரில்  தினேஷ் என்பவர் தான் வளர்த்து டாமி என்ற ஆண் நாயிக்கும், ஜெய்லி என்ற பெண் நாயிக்கும் திருமணம் செய்து வைத்தார். மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த திருமணத்தில் ஆண்கள் பெண்கள் என பலரும் ஆடி, பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மகாசங்கராந்ததியை முன்னிட்டு  நாய்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், இதற்காக 45 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் உரிமையாளர் தினேஷ் தெரிவித்தார்.

எவ்வளவு தான் தங்களது செல்லப்பிராணிகளை மனிதர்கள் விரும்பினாலும், இது போன்ற விநோத செயல்கள் பல வகையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும், இந்த விநோத திருமணத்தின் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com